search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி நீர்"

    • பா.ஜனதா மதவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கும் தி.மு.க. சாதிமோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்கிறது.
    • நாடு முழுவதும் பெண்களை பாதுகாப்பதற்கான கடுமையான சட்ட திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது-

    காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் விடாததால் டெல்டா பகுதியில் பயிர்கள் கருகி கிடக்கின்றன. தி.மு.க. அரசு தண்ணீர் கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்கிறதாம். இப்படியே எத்தனை நாள் தான் மக்களை ஏற்றுவீர்கள்?

    கர்நாடகத்தில் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி தானே நடக்கிறது. அவர்களிடம் பேசி தண்ணீர் பெற முடியாத நிலையில் தானே தி.மு.க. உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தராத கட்சியை தலை மீதும், தோள் மீதும் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

    தமிழகத்தை பா.ஜனதா வஞ்சிப்பதாக கூறும் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று கூறுவாரா?

    நாங்கள் எந்த மாநிலத்தையும் பிரித்து பார்க்கவில்லை. மணிப்பூரை பா.ஜனதா கண்டு கொள்ளவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இந்தியா கூட்டணி. ஆனால் இப்போது வாடும் பயிரை காப்பாற்ற இந்தியா கூட்டணி முன்வரவில்லையே. தமிழகம் இந்தியாவில் ஒரு மாநிலம் தானே. இந்த மாநிலத்தின் விவசாயம் அழிவதை இந்தியா கூட்டணி கண்டு கொள்ளவில்லையே. இப்படிப்பட்ட கூட்டணி தமிழகத்துக்கு தேவையா?

    பா.ஜனதா மதவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கும் தி.மு.க. சாதிமோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்கிறது. நாங்குனேரி சம்பவம் அதற்கு ஒரு சாட்சி. குழந்தைகள் மனதில் சாதிய உணர்வை தூண்டி விடுகிறார்கள். அரசு பள்ளிகளில் மட்டும் தான் இப்படிப்பட்ட சம்வங்கள் நடக்கிறது. இதை தடுக்க தவறியது அரசின் இயலாமைதான்.

    நாடு முழுவதும் பெண்களை பாதுகாப்பதற்கான கடுமையான சட்ட திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. அதை பாராட்ட மனம் வரவில்லை. அதிலும் மொழி பிரச்சனையை சொல்லி தங்கள் குறுகிய மனதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    எதிர்க் கட்சிகள் என்ன சொன்னாலும் சரி. அதை கண்டு கொள்ளாமல் மக்களுக்கு என்ன தேவையோ அதை பா.ஜனதா அரசு தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கும்.

    மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது. நடக்கும் விஷயங்களை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் புரிய வைப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆகஸ்டு மாத நீர்த்தேவையின் அளவு 1.050 டி.எம்.சி. ஆகும். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.
    • மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பு பொறியாளர், காவிரி மற்றும் தென் நதிகள் அமைப்பு ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளது.

    புதுச்சேரி:

    காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதுவை பொதுப்பணித்துறை செயலாளர் மணிகண்டன், தலைமை பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புதுவை அரசு சார்பில் அவர்கள் வலியுறுத்தி பேசியதாவது:-

    ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீர் ஒதுக்கப்பட்ட 0.250 டி.எம்.சி.க்கு பதிலாக கடந்த மாதம் 31-ந் தேதி வரை ஒட்டு மொத்தமாக 0.181 டி.எம்.சி. மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை 0.0690 டி.எம்.சி. ஆகும்.

    ஆகஸ்டு மாத நீர்த்தேவையின் அளவு 1.050 டி.எம்.சி. ஆகும். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.

    காரைக்கால் பகுதியின் தேவையை பூர்த்தி செய்ய போதிய தண்ணீரை திறக்க கர்நாடக மாநிலத்திற்கு உத்தர விடவேண்டும். காரைக்கால்பகுதி புதுவையின் நெல் சாகுபடிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

    தற்போது காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகளுக்கு குறுவை பயிர் பருவத்துக்கு தண்ணீர் இல்லாமல் போகும் நிலை உள்ளது.

    காரைக்கால் பிராந்தியத்திற்கு காவிரி நீரை பெறுவதற்கான உண்மையான மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக தண்ணீரை அளவிடும் அமைப்பினை காரைக்கால் மண்டலத்தின் நுழைவுப் பகுதியில் மாற்றியமைக்க வேண்டும்.

    அதாவது பேரளம் மற்றும் தென்குடி ஆகியவை முறையே கண்ணாப்பூர் மற்றும் மேலப் போலகத்தில் புதிய இடங்களுக்கு மாற்ற மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பு பொறியாளர், காவிரி மற்றும் தென் நதிகள் அமைப்பு ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளது.

    புதுவை தள அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிலத்தை இறுதி செய்ய புதுச்சேரி முழு ஒத்துழைப்பை அளிக்கும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி போதிய அளவு தண்ணீர் வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.

    தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், புதுவை அதிகாரிகள் கூட்டத்தில் முடியும் வரை பங்கேற்றனர்.

    • காவிரி நீரை திறந்து விடாததால் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்ட தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.
    • உடனே காவிரியில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்

    சென்னை:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று மதியம் கூடுகிறது.

    தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தரவேண்டிய காவிரி நீரை திறந்து விடாததால் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்ட தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.

    அதன் அடிப்படையில் இந்த கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணைய சேர்மன் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    இதில் தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இன்றைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு முறைப்படி வழங்காததால், உடனே காவிரியில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர்.

    கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இந்த மாதம் வரை தமிழகத்திற்கு 40 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்து விடாமல் பாக்கி வைத்துள்ளது. அதுகுறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    • ஜூலை மாதம் வந்த காவிரி நீர் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.
    • காரைக்காலுக்கான காவிரி நீரை உரிமையோடு பெற்றுதர முன்வரவேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சுரேஷ், புதுச்சேரி முதல்-அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூரில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட காவிரி நீரின் ஒரு சிறிய அளவிலான பகுதி, கடந்த ஜூலை மாதம், டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான காரைக்காலுக்கு வந்தது. காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. நீர் என்பது கானல் நீராக மாறிவிட்டது. ஜூலை மாதம் வந்த காவிரி நீர் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. தொடர்ந்து வரும் என நம்பி ஏராளமான விவசாயிகள், குறுவை சாகுபடி செய்தனர். ஆனால் அதன்பிறகு தண்ணீர் வரவில்லை.

    புதுச்சேரி அரசின் நிதி பற்றாகுறையால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் பழுதாகி, சரி செய்யமுடியாமல், ஆழ்குழாய் நீரும் இன்றி, விவசாயிகள் குறுவையை காப்பாற்ற வழியின்றி தவித்து வருகின்றனர். பல இடங்களில் நெற்பயிர்கள் கருக தொடங்கியுள்ளது. இதனால் 600 ஹெக்டேர் குறுவை சாகுபடி கேள்விக்குறியாக நிற்கிறது. எனவே, புதுச்சேரி முதல்-அமைச்சர் மற்றும் வேளாண் அமைச்சர் ஆகியோர், கர்நாடகா அரசு மற்றும் மத்திய அரசுக்கு முறைப்படி கடிதம் எழுதி, காரைக்காலுக்கான காவிரி நீரை உரிமையோடு பெற்றுதர முன்வரவேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

    • விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
    • தமிழ்நாட்டிற்குரிய நீரை கர்நாடகம் திறந்துவிடாததும்தான் தற்போதைய நிலைக்கு காரணம்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டிற்கான கர்நாடகத்தின் பருவமழை குறித்து விரிவாக ஆராயாமல், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருக்கிறது என்பதன் அடிப்படையில், ஜூன் 12-ந் தேதியே மேட்டூர் அணையிலிருந்து நீரினைத் திறந்துவிட்டதும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தமிழ்நாட்டிற்குரிய நீரை கர்நாடகம் திறந்துவிடாததும்தான் தற்போதைய நிலைக்கு காரணம்.

    ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ள நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததன் காரணமாக பயிர்கள் கருகியுள்ளதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    விவசாயிகளின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்கவும், கர்நாடக அரசிடமிருந்து உரிய நீரை விரைந்து பெற்று எஞ்சிய பயிர்களை காப்பாற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டுக்கு வர 48 மணிநேரம் ஆகும்.
    • நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    முதலில் வினாடிக்கு 12ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தேவைக்கேற்ப அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு குறித்த காலத்தில் பெய்யாததால் நீர்வரத்து குறைந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 68.94 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 154 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நீர்மட்டம் குறைந்து வருவதால் அணைக்குள் மூழ்கி இருந்த கிறிஸ்துவ கோபுரம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை ஆகியவை வெளியே தெரிகிறது. மேலும் மேட்டூர் அணையின் வலதுகரை வறண்டு காணப்படுகிறது.தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 3 வாரங்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்யத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2ஆயிரத்து 500 கனஅடியும், கபினி அணையில் இருந்து 2ஆயிரத்து 487 கனஅடியும் என மொத்தம் 4 ஆயிரத்து 987 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு நேற்றிரவு திறக்கப்பட்டது.

    பொதுவாக பருவமழை காலங்களில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நேரங்களில் கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டுக்கு வர 48 மணிநேரம் ஆகும். தற்போது மழை இல்லாததால் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.

    காவிரி ஆற்றில் ஆங்காங்கே வறட்சியின் காரணமாக பாளம், பாளமாக நிலம் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வர 6 மணிநேரம் ஆகும். எனவே புதன்கிழமை அதிகாலைக்குள் கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும். தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.

    • காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.
    • கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, கர்நாடக அரசிடம் பெற வேண்டிய காவிரி நீர் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு உதவிட வேண்டும். காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். கர்நாடக துணை முதல்-மந்திரி, முதல்-மந்திரி ஆகியோர் காவிரி நீர் விவகாரத்தில், மேகதாது அணைப் பிரச்சினையில், தமிழகத்துக்கு எதிரான போக்கை கடைபிடிக்கின்ற வேளையில் தமிழக தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் யார் பக்கம். கர்நாடக காங்கிரஸ் பக்கமா அல்லது தமிழக விவசாயிகள் பக்கமா.

    அதாவது கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும். எனவே காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவின் அத்துமீறிய பேச்சை, செயலை கண்டித்து, ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்க மாக உள்ளது.
    • இந்த ஆண்டும் குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி முதல்-அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோ றும் ஜூன் 12-ந் தேதி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்க மாக உள்ளது. இந்த ஆண் டும் குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீரை நம்பி டெல்டா விவசாயிகள் தற்போது, சுமார் 5 லட்சம் ஏக்கர்களில் நடவுப்பணி மற்றும் நேரடி நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் ஜூன் மாதத்தில் பருவமழை பொழியாததாலும், அணை யில் இருந்து பாசனத்திற்கு 12 ஆயிரம் கன அடி தன்ணீர் திறந்துள்ளாலும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடிக்கு கீழ் குறைந்து உள்ளது.

    குறுவை சாகுபடிக்கு இன்னும் 100 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேவைப்படு கிறது. கடந்த சில ஆண்டு களாக ஜூன் மாதம் கர்நா டகாவிலும், தமிழகத்திலும் பருவமழை இயல்பாக பெய்ததால், குறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடு இன்றி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த ஆண்டு அணையில் இருத்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் முழுமையாக கடைமடை வரை சென்று சேரவில்லை. இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவ தால் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்று டெல்டா விவசாயிகள் அச்சத்தில் உள்ளார்கள்.

    காவிரி நதி நீர் ஆணை யத்தின் உத்தரவின்படி, கர்நாடக அரசு ஜூன் மாதம் 9.1 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். இதை வழங்காமல், தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக நீர் பாசனத்துறை மந்திரி சிவகுமார் பிடிவா தமாக பேசி வருகிறார்.

    காவிரி நதி நீர் ஆணை உத்தரவுப்படி இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு வழங்க வேண் டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கி னால்தான், தமிழக டெல்டா பகுதியில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

    எனவே காவிரி டெல்டா விவசாயிகளன் நலன் கருதி, தமிழக முதல்-அமைச்சரும், நீர்ப்பாசன அமைச்சரும், கூட்டணி கட்சியான காங்கி ரஸ் ஆட்சி செய்யும், கர்நா டகா அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, காவிரியில் ஜூன் மற்றும் ஜூலை மாதம் தரவேண்டிய தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் இன்னும் பெய்யவில்லை.
    • மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மத்திய மந்திரிகளை நேரில் சந்திக்கும் நோக்கத்தில் டெல்லி சென்றுள்ளார். அங்கு ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை அவர் நேரில் சந்தித்து, நிலுவையில் உள்ள கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரினார். மேகதாது திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்க கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே டி.கே.சிவக்குமார் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் இன்னும் பெய்யவில்லை. அதனால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) உள்பட பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளன. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. காவிரி நிர்வாக ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டுள்ளது. ஆனால் போதிய நீர் இருப்பு இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க சாத்தியமில்லை. இந்த முறை தண்ணீர் வழங்க வாய்ப்பு இல்லை.

    அனைத்து மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் மாநாடு கர்நாடகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு வருகிற 8 அல்லது 9-ந் தேதி நடைபெற வாய்ப்புள்ளது. மேகதாது திட்டம் குறித்து சட்டத்துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

    இந்த திட்டம் எந்த அளவுக்கு காலதாமதம் ஆகிறதோ அந்த அளவுக்கு திட்ட மதிப்பீடு அதிகரிக்கும். இதனால் மாநில அரசுக்கு நஷ்டம் ஏற்படும். ரூ.9 ஆயிரம் கோடியாக இருந்த இந்த திட்டத்தின் மதிப்பு தற்போது ரூ.13 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    நன்றாக மழை பெய்யும்போது காவிரி ஆற்றில் 700 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கடலுக்கு சென்று கலந்துள்ளது. அதில் நாம் பயன்படுத்த திட்டமிட்டு இருப்பது 40 டி.எம்.சி. மட்டுமே. மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை. இதுகுறித்து அந்த மாநிலத்திற்கு விவரிக்க முயற்சி செய்கிறோம். அரசியலை தாண்டி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது.
    • கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது.

    காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது. கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    காவிரி நீர் கும்பகோணம், மணஞ்சேரி, கல்யாணபுரம், பருத்திக்குடி ஆகிய பகுதிகளை கடந்து சென்றது.

    அப்போது கும்பகோணம் விஜயீந்திர மடம் சார்பில் காவிரி படித்துறையில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து காவிரி நீரில் பாலை ஊற்றி தீபாராதனை காண்பித்தனர்.

    பின்னர் மலர் தூவியும், தேவார பாடலை பாடியும் காவிரி நீரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    • கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் நள்ளிரவு தண்ணீர் வந்தடைந்தது.
    • இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும்.

    குத்தாலம்:

    டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12-ம் தேதி தண்ணீரை திறந்து வைத்தார்.

    இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், காவிரி நீர் இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் நல்லிரவு தண்ணீர் வந்தடைந்தது. அதிகாலை 3 மணி அளவில் பொதுப்பணித்துறையினர் 782 கன அடி நீரை பாசனத்திற்காக திறந்து விட்டனர்.

    மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.

    இதன் படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நிகழாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிட த்தக்கதாகும்.

    • காவிரி ஆறு நாகப்பட்டினம் மாவட்டம் பூம்பூகாரிலும், கொள்ளிடம் ஆறு சிதம்பரம், சீர்காழி இடையே கடலிலும் கலக்கின்றன.
    • அதிக மழையின் காரணமாக மேட்டூர் அணை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் கிட்டத்தட்ட நிரம்பியுள்ளன.

    கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி தமிழகத்தின் டெல்டா பாசனத்துக்கு ஜீவ நாடியாக உள்ளது. இந்த நதி கர்நாடகத்தில் குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ஊரகம், சாமராசநகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

    காவிரி ஆறு திருச்சி முக்கொம்பில் காவிரி என்றும், கொள்ளிடம் என்றும் 2 ஆறுகளாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு நாகப்பட்டினம் மாவட்டம் பூம்பூகாரிலும், கொள்ளிடம் ஆறு சிதம்பரம், சீர்காழி இடையே கடலிலும் கலக்கின்றன.

    கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரியின் பிறப்பிடம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. பயணிக்கிறாள் காவிரி தாய்.

    இரு மாநில எல்லையில் 64 கி.மீ. என்பதையும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ.

    தமிழகத்தில் நுழையும் காவிரி, பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. ஒகேனக்கல்லுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்துதான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது.

    காவிரி ஆற்றில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கும் அணையாக உள்ளது.

    மேட்டூர் அணை தண்ணீர் மூலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட, 12 மாவட்டங்களில், 16.50 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. வழக்கமாக அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை குறுவை, சம்பா, தாளடி என, முப்போகத்திற்கும், 230 நாட்களுக்கு, 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.

    இதில், டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகைக்கு மட்டுமே, 275 டி.எம்.சி., வரை தண்ணீர் தேவை இருக்கும்.

    மேட்டூரிலிருந்து திறக்கப்படும் காவிரி தண்ணீர், கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் என, நான்கு கிளையாக பிரிந்தும், அதன் பின் அரசலாறு, வெட்டாறு, மண்ணியார், பாயினியாறு உட்பட, 36 கிளை ஆறுகளாக பிரிகிறது.

    அதிலிருந்து, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில், 11 ஆயிரம் கி.மீ.,க்கு காவிரி தண்ணீர் பயணித்து, 10 லட்சம் ஏக்கருக்கு, பாசன வசதியை ஏற்படுத்துகிறது.

    குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், வரும் மாதங்களில் தமிழகத்துக்கு காவிரியில் போதிய நீர்வரத்து கிடைக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர்.

    தென்மேற்குப் பருவமழை இன்னும் தொடங்காததால் விவசாயிகளிடையே சற்று கலக்கம் உள்ளது. கடந்த ஆண்டு கர்நாடகா சட்டப்பூர்வமாக கொடுக்க வேண்டிய தண்ணீரை விட 3.5 மடங்கு அதிகமாக காவிரி நீரை மாநிலம் பெற்றிருந்தாலும், அதை சேமிக்கும் திறன் மாநிலத்திற்கு இல்லாததால் அதில் 60 சதவீதம் கடலில் கலந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து நமக்கு கிடைக்கவேண்டிய 177 டி.எம்.சி. தண்ணீரை விடவும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை தமிழகத்துக்கு 667.67 டிஎம்சி (ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீர் கிடைத்துள்ளது.

    அதிக மழையின் காரணமாக மேட்டூர் அணை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் கிட்டத்தட்ட நிரம்பியுள்ளன, மேலும் பெரும்பாலான உபரி நீர் கடலில் விடப்பட்டது.

    மொத்தம் இந்த பருவத்தில் 400 டிஎம்சி தண்ணீர் கடலுக்கு விடப்பட்டது. 1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் தண்ணீர் ஆகும். ஒரு டி.எம்.சி. என்பது 2,830 கோடி லிட்டர் தண்ணீர். 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 24 லட்சம் லாரிகளில் தான் ஒரு டி.எம்.சி தண்ணீரை சேமிக்க முடியும்.

    பருவமழையின்போது, பல டி.எம்.சி. தண்ணீர் காவிரியில் ஓடி வீணாக கலக்கிறது. அந்த வகையில் ஆண்டுக்கு 100 முதல் 400 டி.எம்.சி. மழைநீர் கடலில் கலக்கிறது. பொதுவாக நொடிக்கு 2,600 கன அடி நீர் கடலில் கலக்கிறது. அதாவது, 4 நாட்களுக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது.

    காவிரியில் தடுப்பணைகள் கட்டினால் தண்ணீரை சேமிப்பதோடு நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் ஆதாரம் பெருகவும் வழி கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

    இதுபற்றி தமிழ்நாடு வாழை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் அஜீதன் கூறுகையில், மழைக்காலத்தில் எல்லா நீரையும் சேமித்து வைப்பது இயலாத காரியம். மேலும், சுற்றுச்சூழல் காரணங்களுக்காக உபரி நீரை கடலில் விட வேண்டும். இருப்பினும், சேமிப்பகத்தை அதிகரிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது

    காவிரிப் படுகையில் 990 குளங்கள் உள்ளன. அவை அனைத்தையும் வடிவமைத்து பராமரித்தால் உபரி நீரை சேமிக்க முடியும். காவிரி போன்ற நதிகள் இணைப்புத் திட்டங்களும் தண்ணீரைப் பாதுகாக்க உதவும் என்றார்.

    இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநிலத்திற்குள் நதிகளை இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார்.

    ×